தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய முதல்வர்! அச்சத்தில் எதிர்க்கட்சிகள்!

0
76

அடுத்த வருடம் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆரம்பிக்க இருக்கின்றார்.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் காரணத்தால், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் காணொளி மூலமாகவே பிரச்சாரம் செய்து வருகின்றார் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் அவருடைய உடல்நிலையில் சில கோளாறுகள் இருப்பதாலும், அவர் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை தெரிவித்திருப்பதாலும் தான் அவர் காணொளி மூலமாக பரப்புரை நிறுத்துகிறார் என்றும் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில், இன்று முதல் அரசியல் மற்றும் மத கூட்டங்களை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி இருக்கின்ற நிலையிலே, இன்று முதல் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தன்னுடைய சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டசபைத் தேர்தல் பரப்புரையை இன்று ஆரம்பிக்க இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை தேர்தலுக்கு நாட்கள் மிகக் குறைவாக இருக்கின்ற காரணத்தினால், இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார். அதிமுக அரசின் சாதனைகளை தெரிவித்தும், வாக்குறுதிகளை தெரிவித்தும், மக்களிடம் ஓட்டு கேட்க இருக்கின்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டசபை தொகுதியில் இதுவரையில், அதிமுக 6 முறை வெற்றி பெற்றிருக்கின்றது. இதில் நான்கு முறை வெற்றியை வாங்கிக் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி தான். கடந்த 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுமார் 99 ஆயிரம் வாக்குகள் பெற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்கின்றார். இந்த தேர்தலில் திமுக மூன்றாவது இடத்தை தான் பெற்றது. தற்பொழுது முதல்வர் வேட்பாளராக களம் இறங்க இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தொகுதியில் பிரச்சாரத்தை ஆரம்பிப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.