அடேங்கப்பா இப்படியுமா..இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்!! இன்னும் போட்டியே நடக்கல!!

Photo of author

By Vijay

cricket : இந்திய மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டிக்கு இன்னும் நீண்ட நாட்கள் உள்ள நிலையில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த  தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டியில் விளையாடி முடித்துள்ளது. இதில் இரண்டு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் உள்ளது. இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இங்கிலாந்து அணி தற்போது நியூசிலாந்து அணி உடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றியது. மேலும் இன்னும் ஒரு போட்டி நடைபெறவுள்ளது.முதல் இரண்டு போட்டி போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

ஆனால் அடுத்த வருடம் ஜூன் 25 ம் தேதி நடைபெற உள்ள இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடருக்கான 4 நாட்களுக்கும் உள்ள அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இந்த போட்டி நடைபெற இன்னும் 203 நாட்கள் உள்ளன நிலையில் விற்று தீர்ந்து சோல்டு அவுட் ஆகியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.  கடைசியாக நடந்து முடிந்த தொடரில் 4-1 என்ற விகிதத்தில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது.