இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் இந்தியா… தொடருமா வெற்றி?
இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது.
டி 20 உலகக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்திய அணி. தங்களது ரைவல் அணியான பாகிஸ்தானை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரு மெகா விருந்தை ரசிகர்களுக்கு படைத்தது.
இந்த போட்டியில் பாகிஸ்தானை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த முக்கியக் காரணமாக அமைந்த இந்திய வீரர் விராட் கோலியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டர் சோயப் மாலிக் பிரமித்து பாராட்டியுள்ளார். அக்டோபர் 23, ஞாயிற்றுக்கிழமை, கோஹ்லி தனது மாஸ்டர் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார் மற்றும் ஆட்டமிழக்காமல் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து தங்கள் இரண்டாவது போட்டியை இந்திய அணி நெதர்லாந்து அணிக்கு எதிராக இன்று விளையாடுகிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி சிட்னி மைதானத்தில் நடக்கிறது. இதுவரை டி 20 போட்டிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதியதில்லை. இதுவே முதல் போட்டி.
இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லாமல் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா, சில பிரச்சனைகளால் பயிற்சியை தொடங்கவில்லை. ஆனால் அவர் அணியில் இடம்பெறுவார் என்றே சொல்லப்படுகிறது.