ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி ஆனது இனி வரக்கூடிய காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாடாது என பிசிசிஐ அதிரடி முடிவை வெளியிட்டு இருக்கிறது. காஷ்மீரில் உள்ள பஹல் காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை அடுத்து இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ ஐசிசிஐ க்கு எழுதிய கடிதம் :-
இனி வரக்கூடிய காலங்களில் ஐசிசி போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணி ஆனது பாகிஸ்தான் அணியுடன் சேர்ந்து விளையாடாது என்றும் குழுவில் சேர்க்கும் பொழுது இந்தியாவையும் பாகிஸ்தானையும் சேர்க்க வேண்டாம் என்று வலியுறுத்தி அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜுவ் சுக்லா தெரிவித்திருப்பதாவது :-
காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலை கண்டிக்கிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசு என்ன சொன்னாலும் அதை நாங்கள் செய்வோம் என குறிப்பிட்டதோடு அரசின் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி வரக்கூடிய காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரவ போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றும் ஐசிசி போட்டிகள் வரும் பொழுது ஐசிசி வலியுறுத்தல் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம் ஐசிசிக்கும் இப்போது என்ன நடக்கிறது என்பது தெரியும் என குறிப்பிட்டு இருக்கிறார்.