இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு சில முக்கிய வீரர்களை இறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. இலங்கை நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய அணி அங்கே மூன்று ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது.
அதில் ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி விழுத்தி இருந்தது.
இந்த சூழ்நிலையில், இந்திய வீரர் குணால் பாண்டியா அவர்களுக்கு நோய் தொற்று இருப்பது நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது இதன்காரணமாக நேற்று முன் தினமே நடைபெறவிருந்த 2வது டி20 போட்டி நேற்றைய தினம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது இதற்கிடையில் இரண்டு அணி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
இதில் வேறு எந்த வீரர்களுக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்படவில்லை. ஆகவே 2வது டி20 போட்டி திட்டமிட்டபடி நேற்றைய தினம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் க்ருணால் பாண்டியாவிடம் மிகவும் நெருக்கமாக இருந்த பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ், இஷாந்த் கிஷன், உள்ளிட்ட மூவருக்கும் நேற்றைய தினம் நடைபெறவிருந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று சொல்லப்பட்டது.
இந்த மூன்று பேருக்கும் நோய்தொற்று இல்லை என்று முடிவு வந்தாலும் இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி என இரு போட்டியிலும் விளையாடுவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என சொல்லப்படுகிறது முதல் போட்டியில் மிக சிறப்பாக ஆடி அரைசதம் கண்ட சூரியகுமார் இந்த போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை. என்றால் அது இந்திய அணிக்கு நிச்சயமாக ஒரு பின்னடைவாக பார்க்கப்படும்.
அதோடு மட்டுமல்லாமல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி இங்கிலாந்து நாட்டில் நடக்க இருக்கின்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடருக்கும் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் அழைக்கப்பட மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.