தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

Photo of author

By Vinoth

தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா… அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யுமா?

உலகக்கோப்பைப் போட்டி தொடரில் இந்தியா தங்கள் மூன்றாவது போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான், நெதர்லாந்து என அடுத்தடுத்து இரு தொடர் வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இன்று தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பு உறுதியாகிவிடும்.

இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு பெர்த் மைதானத்தில் இந்த போட்டி தொடங்க உள்ளது. வானிலை தகவல்களின் படி மாலை மேகமூட்டத்துடன் காணப்படும், ஆனால் ஆட்ட நேரத்தின் போது மழைக்கான முன்னறிவிப்பு எதுவும் இல்லை. இந்த ஆடுகளத்தில் நடைபெற்றுள்ள 21 ஆட்டங்களில் 13 இல் முதலில் பேட் செய்யும் அணிகள், வெற்றி பெற்றுள்ளன. அதனால்  டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பேட் செய்யவே முடிவெடுப்பார்.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா நெதர்லாந்துக்கு எதிராக ஒரு ஓவர் மட்டுமே வீசினார், பின்னர் தீபக் ஹூடா களத்தில் மாற்றப்பட்டார். இந்தியா தனது லெவன் அணியில் எந்த மாற்றமும் செய்ய வாய்ப்பில்லை.

இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இதுவரை நேருக்கு நேர் 22 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்திய 13 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்கா 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. உலகக்கோப்பையில் நடந்த 5 போட்டிகளில் இந்தியா 4 முறையும் தென் ஆப்பிரிக்கா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது.