இன்று தென் ஆப்ப்ரிக்காவுடன் முதல் டி20 போட்டி… வெற்றிப்பாதை தொடருமா?

0
166

இன்று தென் ஆப்ப்ரிக்காவுடன் முதல் டி20 போட்டி… வெற்றிப்பாதை தொடருமா?

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது.

புதன்கிழமை (இன்று) தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய அணி டெத் பவுலிங்கில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. அதையடுத்து அந்த வெற்றிக்களிப்போடு இன்று தென் ஆப்ப்ரிக்காவை எதிர்கொள்கிறது. திருவனந்தபுரத்தில் நடக்கும் இந்த போட்டிக்காக இரு அணிகளும் திருவனந்தபுரம் சென்றுள்ளனர். இன்று மாலை 7 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.

இன்றைய போட்டியில் முகமது ஷமி உள்ளிட்ட பவுலர்களுக்கு வாய்ப்பளிக்கபடும் என தெரிகிறது. சமீபத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா தொடரை இழந்தார். அதன் பின்னர் இந்த தொடரில் அவர் பங்கெடுக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதுபோல தீபக் சஹாருக்கும் வாய்ப்பளிக்க படும் என்றும் சொல்லப்படுகிறது. மற்றொரு வீரரான ரிஷப் பண்ட்டுக்கும் ஓய்வளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இந்த தொடர் முழுவதும் ஓய்வளிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக பல இளம் வீரர்களும் வாய்ப்பளிக்கப்பட்டு சோதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் பெங்களூர் மற்றும் சென்னையில் நடக்க உள்ளன.

Previous articleஇருசக்கர வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:! ஷூவினால் ஏற்படும் விபத்து!!
Next articleஇந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விருப்பம்… ஆனால் பிசிசிஐ?