இந்தியா உலக முதலீட்டாளர்களை வரவேற்கிறது – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Photo of author

By Parthipan K

இந்தியா உலக முதலீட்டாளர்களை வரவேற்கிறது – பிரதமர் மோடி வேண்டுகோள்!

Parthipan K

கானொலி காட்சி வாயிலாக உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்திய பிரதமர் மோடி : “உலக முதலீட்டாளர்களை இந்தியா வரவேற்பதாக கூறியுள்ளார்.

அதாவது இந்தியாவில் தொழில் செய்வதற்கு மிகச் சிறந்த உள்கட்டமைப்பு சார்ந்த அனைத்து வசதிகளும் இருப்பதாலும், அத்துடன் உற்பத்தி செய்வதற்கான சூழலும் அமையப் பெற்றதாலும் இந்தியாவில் பெரிய முதலீடு கொண்ட தொழிலை தொடங்க வருமாறு மோடி அழைப்பு விடுத்தார்.

காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி, உலக முதலீட்டாளர்களிடம், வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அனைவரும் இந்தியாவுடன் இணையும்படி பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்துகளை தயாரிப்பதில் இந்தியா வெற்றியடைந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி எதிர்காலத்தில் இதேபோல் பல புதிய மருந்துகளும் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்”.