இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பில்டிங் தேர்வு செய்தது.இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை போராடித் தான் வென்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் குறுகிய வடிவிலான போட்டிகளில் எப்போதும் அபாயகரமானவர்கள். அதனால் மிகவும் எச்சரிக்கையுடன் ஆட வேண்டியது அவசியமாகும்.
பொதுவாக சென்னை ஆடுகளம் வேகமின்றி (ஸ்லோ) காணப்படும்.
இத்தகைய ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு நன்கு எடுபடும். கடைசியாக இங்கு நடந்த 7 ஆட்டங்களில் 6-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கக்கூடும்.