“கிலி” ஏற்படுத்திய மைதானத்தில் “புலி” ஆகினார் கிங் “கோலி”

Photo of author

By CineDesk

கட்டாக் மைதானத்தில் நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலி 85 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு ஆற்றினார். மேலும் ஆட்டநாயகன் விருதையும் அவர் பெற்றார். இந்த மைதானத்தில் கோலி அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்

அனைத்து விதமான மைதானங்களிலும் கிட்டத்தட்ட சதங்களை அடித்துள்ள கோலி ஒருநாள் போட்டிகளில் இதுவரை 43 சதங்கள் அடித்துள்ளார். ஒருநாள் போட்டியில் சச்சினுக்கு அடுத்த இடத்திலும், அடுத்தடுத்த சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்திலும் உள்ளார்.

அனைத்துவித மைதானங்களிலும் தன் பேட்டிங்கின் மூலம் எதிரணியை கலங்கடித்த கேப்டன் கோலிக்கு கட்டாக் மைதானம் ஒரு ராசியில்லாத மைதானமாக இருந்தது.

இதற்கு முன் இந்த மைதானத்தில் 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு டி20 விளையாடிய அவரது ஸ்கோர் விவரம் 3,22, 1, 8 என படு மோசமாக அமைந்திருந்தது. அதாவது நான்கு இன்னிங்ஸிலும் வெறும் 34 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஐந்தாவது இன்னிங்ஸ்சனா நேற்றைய போட்டியில் 85 ரன்கள் எடுத்ததன் மூலம் தனக்கு ராசியில்லாத மைதானம் என்ற மோசமான வரலாற்றை கோலி முறியடித்தார்.