கட்டாக்கில் வெஸ்ட் இண்டீஸ்ஸை அட்டாக் செய்தது இந்தியா?

0
55

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டுவெண்ட்டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டுவெண்ட்டி 20 தொடரில் இந்தியா 2-1 கணக்கில் தொடரை வென்றது.

ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் சென்னையில் நடந்தது. இதில் வெஸ்ட்இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும்,2-வது ஒரு நாள் போட்டியில் ஆபாரகமாக விசாகப்பட்டினத்தில் பதிலடி கொடுத்த இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

இந்நிலையில், இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட் செய்ய கேட்டு கொண்டார்.

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் லீவிஸும் சாய் ஹோப்ஸ் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்கினர். முன்பு போட்டியில் சிக்ஸர்கள் பவுண்டரிகள் அடித்த ஜோடி இந்த போட்டியில் நிதானமாக ஆட்டத்தை ஆடியது.

அணியின் ஸ்கோர் 57 ஆக இருந்தபோது 14-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா போட்ட பந்தை தூக்கி அடித்த லூயிஸ் நவ்தீப் சைனி இடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். 20 ஆவது ஓவரில் சாய் ஹோப் விக்கெட்டை முகமது சமி போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.

ஹெட்மயர் 37 ரன்களும் சேஸ் 38 ரன்களும் எடுத்தனர். அதிரடி ஆட்டக்காரர் பூரான் மற்றும் கேப்டன் பொல்லார்டும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பூரான் 89 ரன்களும் கேப்டன் பொல்லார்ட் 51 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். அதில் 7 சிக்ஸர்களும் 3 பவுண்டரிகளும் அடங்கும். 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் இழப்புக்கு அணி 315 ரன்கள் எடுத்தது.

இந்திய தரப்பில் சைனி 2 விக்கெட்டுகளும் ரவிந்திர ஜடேஜா தாக்கூர் மற்றும் ஷமி தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் கே எல் ராகுலும் நிலைத்து நின்று ஆடினார். நாலாபுறமும் பவுண்டரிகளும் சிக்ஸர்களும் அடித்தனர்.

ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் அடுத்தடுத்து 50 ரன்களை கடந்தனர் அணியின் ஸ்கோர் 122 ஆக இருந்த பொழுது ரோகித்சர்மா 63 ரன்களில் ஆட்டமிழந்தார் இதில் 8 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்கும் பின்பு கேப்டன் கோலி உடன் ஜோடி சேர்ந்த கே எல் ராகுல் சிறிது நேரம் நிலைத்து நின்று ஆடினார் அணியின் ஸ்கோர் 167 ஆக இருந்த பொழுது கேஎல் ராகுல் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் அளித்தார்.

அதன்பின் சீரிய இடைவெளியில் இந்தியா விக்கெட் விழுந்துகொண்டே இருந்தது பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், கேதர் ஜாதவ் ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

பின்பு கோலியுடன் ஜோடி சேர்ந்து ரவீந்திர ஜடேஜா நிலைத்து நின்று ஆடினார் இந்த ஜோடி வெற்றி இலக்கை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 286 ஆக இருந்த பொழுது பால் பந்தில் 85 எடுத்து இருந்த கோலி போல்டு ஆனார்.

கோலி அவுட்டான பிறகு இன்றைய தோற்றுவிடும் என்னும் என்ற எண்ணம் ரசிகர்களை வருடியது பிறகு ஜடேஜா உடன் தாக்கூர் இணைந்து ஆடினார். காட்ரல் வீசிய ஒரு ஓவரில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் என்று பறக்கவிட்டு வெற்றியை எளிதாக்கினார் தாக்குர்.

48.4 ஓவரில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 316 எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் 39 ரன்களை எடுத்த ரவீந்திர ஜடேஜா கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்று கைப்பற்றியது. ஆட்டநாயகனாக கேப்டன் கோலியும் தொடர் நாயகனாக ரோகித் சர்மாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

author avatar
CineDesk