நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா செய்த சாதனை என்ன?

Photo of author

By CineDesk

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 240 ரன்கள் எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மாவும் கேஎல் ராகுல் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். கேப்டன் கோலியும் தன் பங்குக்கு சிக்ஸர்மலைகளாக அடித்து நொறுக்கினர்.


241 ரன் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்குடன் ஆட்டத்தை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்தது இதன்மூலம் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தின் முதல் சிக்சரை அடித்த ரோகித் சர்மா, சர்வதேச போட்டிகளில் 400 சிக்சர்களை கடந்து அசத்தினார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 400 சிக்சர்களை அதிவேகமாக எட்டிய வீரர், மொத்தத்தில் இந்த மைல்கல்லை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார்.

சர்வதேச அதிக சிக்சர் விளாசிய பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் முறையே வெஸ்ட் இண்டீஸ் இன் கிரிஸ்ட் 534 சிக்ஸர் பாகிஸ்தானின் சாகித் அப்ரிடி சிக்ஸர்கள் அடித்துள்ளனர் உள்ளனர் 354 சர்வதேச போட்டிகளில்(ஒருநாள் போட்டி- 234, டெஸ்ட்-52,இருபதுஓவர்-120)விளையாடியுள்ள ரோகித் சர்மா இதுவரை 404 சிக்ஸர்கள் அடித்துள்ளார்