வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

Photo of author

By Parthipan K

வெடித்தது ஆசியக்கோப்பை சர்ச்சை:மோதிக்கொள்ளும் இந்திய பாகிஸ்தான் வாரியங்கள்!

ஆசியக் கோப்பைத் தொடர் பாகிஸ்தானில் நடந்தால் அதில் இந்தியா பங்கேற்காது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இலங்கை வீரர்கள் மேல் பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அங்கு எந்த ஒரு வெளிநாட்டு அணியும் சென்று கிரிக்கெட் விளையாடுவது கிடையாது. அதுபோல அரசியல் காரணங்களால் இந்தியாவுக்குள்ளும் பாகிஸ்தான் வீரர்களுக்கு கிரிக்கெட் விளையாட அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக இருநாட்டு வாரியங்களும் அவ்வப்போது சர்ச்சையானக் கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு ஆசிய அணிகள் மோதும் ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த ஆசிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் இப்போது மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது. பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடந்தால் இந்திய அணி வீரர்களை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா கலந்து கொள்ளாவிட்டால் அது ஆசியக் கோப்பையே இல்லை. அதனால் போன முறை இந்தியாவில் நடக்க இருந்த வேளையில் பாகிஸ்தான் வீரர்களின் விசா கிடைக்காத காரணத்தால் துபாய்க்கு மாற்றப்பட்டது போல இந்த முறையும் மாற்றினால் இந்தியா கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான கனடனங்களைப் பதிவு செய்துள்ளது. இந்தியா விளையாடாவிட்டால் பெரிய அளவில் வருமானம் இருக்காது என்பதால் ஆசிய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு எடுக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதில் மற்ற நாடுகளின் வாரியங்கள் சொல்லும் முடிவுகளும் முக்கியப் பங்காற்றும் என சொல்லப்படுகிஒறது.

கிரிக்கெட் உலகில் கோலோச்சும் பிசிசிஐ –யைப்  பகைத்துக்கொண்டு மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாது எனவும் பேசப்படுகிறது.