இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்! மண்ணை கவ்வியது இங்கிலாந்து அணி!

Photo of author

By Sakthi

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய அணி 2-வது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை தோற்கடித்து அபார வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்றையதினம் நடைபெற்ற போட்டியில் 2-வது இன்னிங்சில் மூன்றாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 19 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் சார்பாக அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் இரண்டு ரன்களும் லாரன்ஸ் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்கள். இந்திய அணி இங்கிலாந்து அணி 429 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில், இன்றைய தினம் நடந்த நான்காவது மற்றும் கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி வீரர்கள் சாதுரியமாக கைப்பற்றினார்கள் இந்த நிலையில் இங்கிலாந்து அணி 164 ரன்களுக்கு எல்லா விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் மிகச்சிறந்த வெற்றியைப் பெற்றது.