23ஆம் தேதி வெளியாகிறது இடைக்கால பட்ஜெட்! மக்களை கவரும் வகையில் இருக்கும் என்று தகவல்!

0
63

தமிழக இடைக்கால பட்ஜெட்டை எதிர்வரும் 23 ஆம் தேதி காலை 11 மணி அளவில் மாநிலத்தின் நிதி அமைச்சரும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். தமிழக சட்டசபையின் இந்த வருடத்திற்கான முதல் கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி ஆரம்பமானது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சட்டசபை கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்தினார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது இதனையடுத்து எதிர்வரும் 23ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், சட்டசபை தேர்தல் விரைவில் வரவிருக்கும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே அரசால் தாக்கல் செய்ய இயலும். இடைக்கால பட்ஜெட்டை மாநில நிதி அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய இருக்கிறார். தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பட்ஜெட்டில் புதிய இலவச அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்ப்புகள் மக்களிடையே நிலவி வருகிறது.

அதிலும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ஆனது சென்ற ஒரு வருட காலமாக செயல்படுத்தப்படாமல் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரும் என்று சொல்லப்படுகிறது. ஏழைகளுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தவிர தொழில் துறையை ஊக்குவிப்பது குறித்தும் அறிவிப்புகள் வெளியாகலாம், அதோடு பெண் வாக்காளர்களை கவர்ந்து இழுக்கும் விதமாக புதிய திட்டங்களும் வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.