அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து!

Photo of author

By Rupa

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையிலுள்ள செப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 329 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.ரோஹித் சர்மா 161 ரன்களும்,ரஹேனே 67 ரன்களும்,ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.மொயின் அலி 4 விக்கட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்தை திக்குமுக்காட செய்தது.அஸ்வின் அபாரமாக பந்து வீசி 5 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அவர்களுக்கு பிறகு களமிறங்கிய வீரர்களும் ஓரிரு ரன்களிலேயே வெளியேறினர்.

இந்திய அணி சார்பாக அஸ்வின் 5,இஷாந்த் சர்மா,அக்சார் படேல் ஆகியோர் தல 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.இதனை தொடர்ந்து இந்திய அணி 195 ரன்கள் முன்நிலையுடன் 2 வது இன்னிங்சில் விளையாடி வருகிறது.