ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன?

0
103

ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப முன்வராத தொலைக்காட்சி சேனல்கள்… பின்னணி என்ன?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடக்கும் 3 ஒரு நாள் போட்டிகளை ஒளிபரப்ப எந்த சேனல்களும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது.

ஆகஸ்ட் 18 முதல் 22 வரை மூன்று ஒருநாள் போட்டிகளுக்காக ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் 16வது உறுப்பினராக கே.எல்.ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். ராகுல் அணிக்கு கேப்டனாகவும் இருப்பார், முன்பு தலைமை தாங்க இருந்த ஷிகர் தவான் இப்போது துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்த தொடருக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். காயம் காரணமாக அவதிப்பட்ட கே எல் ராகுல் நேரடியாக அசியக்கோப்பை தொடரில்தான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ஜிம்பாப்வே தொடரில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்போது இந்த தொடரை ஒளிபரப்ப எந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஜிம்பாப்வே எதிரான ஒரு நாள் போட்டியை நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என்பதால் தனியார் தொலைக்காட்சியில் பாராமுகம் காட்டுகின்றன. இதனால் இந்த போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

ஜிம்பாப்வேக்கு எதிரான இந்திய அணி

கே எல் ராகுல், ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் த்ரிபாட்டி, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், வாசிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், அக்‌ஷர் பட்டேல், ஆவேஸ் கான், பிரசீத் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சாஹர்.

Previous articleபட்டப்படிப்பு முடித்திருக்கிறீர்களா? ரயில்வேயில் காத்திருக்கும் சூப்பர் வேலைவாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்!
Next articleஇந்தியா vs பாகிஸ்தான் போட்டி… தொடங்கிய டிக்கெட் விற்பனை… ஹேங்க் ஆன இணையதளம்!