இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமினில் வெளி வந்தார்

0
182

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது 3 பேர் பலியான வழக்கில் கிரேன் ஆபரேட்டர் ஜாமீனில் வெளி வந்தார்

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் ,காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இந்தியன்2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று இரவு படப்பிடிப்பின்போது மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இருந்த ராட்சத கிரேன் கீழே சாய்ந்து விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட 3 தொழிலாளர்கள் பலியானார்கள்.

இந்த விபத்தில் பலர் காயமடைந்தனர். நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் மற்றும் நடிகை காஜல் அகர்வால் நூலிழையில் உயிர் தப்பினர்.

காயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த விபத்து தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் கமலஹாசன் இயக்குனர் ஷங்கர் மற்றும் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்பி தனித்தனியாக விசாரணை செய்ய போலீசார் முடிவு செய்திருந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கிரேன் ஆபரேட்டர் ராஜன் மற்றும் கிரேன் உரிமையாளர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.தலைமறைவாக இருந்த கிரேன் ஆபரேட்டர் ராஜனை போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கிரேன் ஆபரேட்டர் ராஜன் என்பவருக்கு அம்பத்தூர் நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கி உள்ளது.

Previous articleஇரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பும் இந்தியா – தாங்கி பிடிப்பாரா ரஹானே !
Next articleதனது முழு சம்பளத்தை ஆதரவற்றோர் இல்லத்திற்கு கொடுத்த சன்னி லியோன்! மனதை நெகிழ வைத்த சம்பவம்!!