முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

0
196

முதலில் கமல் இல்லாத காட்சிகள்… இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கும் தேதி இதுதான்!

இந்தியன் 2 திரைப்படம் மீண்டும் பல தடைகளுக்குப் பிறகு தொடங்க உள்ளது.

1996 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், சித்தார்த் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு 2 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது விக்ரம் வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில் மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கப்பட உள்ளது. இந்த படத்தை தொடங்குவதில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் சமீபத்தில் மறைந்து விட்ட நிலையில் அவர்களுக்கு பதில் வேறு நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

மூத்த நடிகர்கள் கார்த்தி மற்றும் சத்யராஜ் ஆகியோரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிகிறது. முதலில் கமல் இல்லாத காட்சிகளை ஷங்கர் படமாக்க உள்ளார். அதன் பின்னர் படப்பிடிப்பில் கமல் இணைய உள்ளாராம். அதுபோல காஜல் அகர்வால் செப்டம்பர் 13 ஆம் தேதி ஷூட்டிங்கில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

Previous articleதிருச்சிற்றம்பலம்… உற்சாகத்தில் திரையைக் கிழித்த ரசிகர்கள்? பிரபல திரையரங்கில் நடந்த சம்பவம்!
Next articleசூர்யகுமார் யாதவ்வை டிவில்லியர்ஸோடு ஒப்பிடுவதா? ரிக்கி பாண்டிங்குக்கு பாகிஸ்தான் வீரர் பதில்