கம் பேக் இண்டியன் பாட்டோடு வெளியான இந்தியன் 2 டீசர்! சுபாஷ் சந்திர போஸ் கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசன்!!

0
40
#image_title

கம் பேக் இண்டியன் பாட்டோடு வெளியான இந்தியன் 2 டீசர்! சுபாஷ் சந்திர போஸ் கெட்டப்பில் நடிகர் கமல்ஹாசன்!!

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடித்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகர் கமல்ஹாசன் அவர்கள் நடிப்பில் 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குநர் சங்கர் இயக்கியுள்ளார். மேலும் காஜல் அகர்வால், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, சித்தார்த், எஸ்ஜே சூரியா, ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ள இந்தியன் 2 திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 திரைப்படத்தின் டீசர் இன்று(நவம்பர்3) மாலை 5.30 மணிக்கு வெளியாகி இருக்கின்றது.

தமிழில் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டார். அதே போல தெலுங்கில் இயக்குநர் ராஜமௌலி, மலையாளத்தில் நடிகர் மோகன்லால், ஹிந்தியில் அமீர்கான், கன்னட மொழியியல் நடிகர் கிச்சா சுதீப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

இன்று(நவம்பர்3) மாலை வெளியான இந்த டீசரில் 1996ம் ஆண்டில் இருந்து 2023ம் ஆண்டு தொடங்குவதாக காண்பிக்கப்படுகின்றது. இந்த கிலிம்ப்ஸ் வீடியோ கம் பேக் இந்தியன் என்ற பாடலுடன் வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் மறைந்த நடிகர்கள் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு ஆகியோரையும் காண்பித்துள்ளனர். இறுதியில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் சுபாஷ் சந்திர பஸ் கெட்டப்பில் வருவது போல காண்பிக்கப்படுகின்றது. மேலும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் வணக்கம் இந்தியா என்றும் இந்தியன் இஸ் பேக் என்றும் கூறுகிறார். இந்த கிலிம்ப்ஸ் வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.