குல்காம் மாவட்டம் அர்ரா பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில் இந்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அப்போது ரகசியமாக ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். உடனே பதிலுக்கு இந்திய பாதுகாப்பு படையும் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதில் ஒருவன் அடையாளம் காணப்பட்ட நிலையில், இருவரும் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும் கூடுதல் தகவலாக கடந்த ஆறு மாதங்களில் பாதுகாப்பு படையினருக்கும், எதிர் தீவிரவாத தரப்புக்கும் நடந்த தாக்குதலில் 100 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் பேருந்தில் இருந்து பாதுகாப்பு படையினர் இறங்கிய போது மசூதியில் மறைந்து தீவிரவாதிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு முதியவர், ஒரு சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.