வேலியே பயிரை மேய்ந்தால் இனி யாரை நம்புவது?? 15 வயது சிறுமிக்கு தந்தையும் தாத்தாவும் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த அவலம்…..??

0
272

என்னதான் உலக நாடுகளே கொரோனா பீதியில் ஸ்தம்பித்து இருந்தாலும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறைந்த பாடில்லை. சொல்லப் போனால் கடந்த சில நாட்களாக அதிகரித்து தான் வருகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். அதிலும், பெரும்பாலும், இந்த தீய செயல்களில் ஈடுபடுபவர்கள் அக்குழந்தைகளுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பவர்கள் என்ற உண்மை மனித குலத்தின் மீதான நமது நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தஞ்சையில் நடந்து உள்ளது.

தஞ்சை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தனது தந்தை மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வந்தார்.தாய் சிறுமியின் சிறுவயதிலேயே இறந்து விட்டார்.இதனால் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல் வேலைக்கு சென்று தங்கையை கவனித்து வந்துள்ளார்.

சிறுமியின் தந்தைக்கு மது பழக்கம் இருந்து வந்தது. குடித்துவிட்டு தனது மகளையே பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கினார்.இதனை அறிந்த உறவினர்கள் அந்த சிறுமியையும் அவளுடைய தங்கையையும் தாயின் சித்திவீட்டில் தங்க வைத்தனர்.

சின்ன தாத்தா மற்றும் சின்ன பாட்டியுடன், தங்கியிருந்த அந்த சிறுமி கடந்த ஆண்டு பூப்பெய்தினாள். இதனை தொடர்ந்து சின்னதாத்த வயது 65, சிறுமியிடம் பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தி உள்ளார்.அவ்வாறு இணங்காவிட்டால் உன் தங்கையை பாலியல் கொடுமை செய்து அவளின் வாழ்க்கையை அழித்து விடுவேன் என்று மிரட்டி அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை தொடர்ந்து செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டதன் காரணமாக தனது சின்ன பாட்டியுடன் அந்த கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தனர்.பின்பு அந்த குழந்தையிடம் விசாரித்த போலீசார் நடந்த கொடுமைகள் அத்தனையும் கூறி கண்ணீர் விட்டிருக்கிறாள்.

புகாரின்பேரில் அந்த சிறுமியின் தந்தை மற்றும் தாத்தவை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.

நம் ரத்த சொந்தங்களைக் கூட நம்ப முடியாத கொடிய காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். குழந்தைகளுக்கு அனைத்து விதமான எச்சறிக்கை அறிவுறுத்தல்களையும் கொடுப்பதும், கூடிய வரை, அவர்களை தங்கள் கண் பார்வையிலேயே வைத்திருப்பதும் பெற்றோரின் தலையாய கடைமையாகும். அதுமட்டுமின்றி மனித குலத்தின் அடிப்படை நற்பண்புகளை எள்ளி நகையாடும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

Previous articleதிடீரென தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்; இந்திய ராணுவம் செய்த தரமான சம்பவம்.!!
Next articleபிரபல கிரிக்கெட் வீரர் கைது; எதிர்பாராத சம்பவத்தில் சிக்கினார்..!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here