யாரு சாமி நீ துள்ளி குதித்த கம்பீர்.. வாயை பிளந்த ஆஸ்திரேலியா !! பேட்டிங்கில் பட்டையை கிளப்பும் இந்திய பவுலர்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் அடித்த பவுண்டரி துள்ளி குதித்த கம்பீர்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா அணியுடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸ் விளையாடுவதில் சொதப்பி வரும் நிலையில் இந்த தொடரிலும் அதையே செய்து வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

இந்த தொடரில் ஏற்கனவே 2 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில்  இரு அணிகளும் ஒரு ஒரு போட்டியில் வென்று சமநிலையில் உள்ளது. முதல் இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி  445  ரன்கள் அடித்தது. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை அளித்த நிலையில் கே எல் ராகுல் போராடி 84 ரன்களும் ஜடேஜா 77 ரன்களும் சேர்த்தனர்.

பேட்ஸ் மேன்கள் அனைவரும் விக்கெட் இழந்த நிலையில் தவித்த இந்திய அணி கல்மிரநிஞார் ஆகாஷ் தீப் மற்றும் பும்ப்ரா இணை ஒரு விக்கெட் மட்டும் மீதம் உள்ள நிலையில் பொறுமையாக விளையாடி வந்தனர்.  ஃபாலோ ஆனை தவிர்க்க போராடி வந்த நிலையில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இருந்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச வந்தார் முக்கிய வீரர்களின் விக்கெட்டை எடுத்த அவர் பந்து வீச வரும்போது அனைவர் மத்தியிலும் பதற்றம் நிலவியது ஆனால் ஆகாஷ் தீப் பவுண்டரி அடித்தார். இதை கம்பீர் துள்ளி குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த பந்தில் சிக்ஸர் பறக்க விட்டார்.