முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!

0
163

முதல் ஒருநாள் போட்டி… இந்திய பந்துவீச்சாளர்கள் அபார பந்துவீச்சு!

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது.

ஜிம்பாப்வே மற்றும் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி இன்று தொடங்கியுள்ளது. இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. பலம் மிக்க இந்திய அணியை கத்துக்குட்டி அணியாக ஜிம்பாப்வே சமாளிக்குமா என்ற கேள்வியோடு தொடங்கிய போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்து வெளியேறி வருகின்றனர். தற்போது வரை 8 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் சேர்த்துள்ளது. இந்தியா சார்பில் தீபக் சஹார் 3 விக்கெட்கள், பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்களை அதிகபட்சமாக கைப்பற்றினர். இதனால் இந்த போட்டியை இந்தியா எளிதில் வெற்றி பெற வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

இந்த தொடரை ஒளிபரப்ப எந்த முன்னணி தனியார் தொலைக்காட்சி சேனலும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஜிம்பாப்வே எதிரான ஒரு நாள் போட்டியை நட்சத்திர வீரர்கள் இல்லாத இந்திய அணி விளையாடுவதைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் இருக்காது என்பதால் தனியார் தொலைக்காட்சியில் பாராமுகம் காட்டுகின்றன. இதனால் இந்த போட்டிகள் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.

Previous articleசிரஞ்சீவி நடிக்கும் காட்பாதர் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி… மாஸ் போஸ்டருடன் வெளியீடு!
Next articleஜடேஜாவுக்கு பதில் சி எஸ் கே வில் மீண்டும் ரெய்னா? லேட்டஸ்ட் தகவல்