டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!

0
270
டீ, காபி குடிப்பிங்களா? அய்யயோ.. போச்சு! இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை!
tea coffie side effect

டீ, காபியில் அதிக அளவில் காஃபின் உள்ளதால், அது நம் நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடும் என்று, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விடுத்த எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்துணர்ச்சிக்காக ஒரு காலத்தில் கம்மங்கூழும், பழைய சோறும் நீராகாரமும் குடித்து வந்த தமிழர்கள் இன்று தேநீருக்கும், வித விதமான காஃபி-களுக்கும் அடிமையாக உள்ளனர்.

காலை எழுந்தவுடன் ஒரு டீ, காலை கடனை முடிக்க ஒரு டீ, முற்பகலுக்கு ஒரு டீ, மாலை நேரத்தில் ஒரு டீ, இரவு தூங்கும் முன்பும் ஒரு டீ என நான் ஒன்றுக்கு 5-6 டீ குடிப்பதையே வழக்கமாக தமிழகத்தில் பலரும் கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் மது குடிப்பவர்களுக்கு டாஸ்மார்க் கடைகள் இருக்கும் எண்ணிக்கையை விட, டீ குடிப்பவர்களுக்காக திறக்கப்பட்ட டீக்கடைகளையே அதிகம். அதன் வியாபாரமும் குறைந்தது இல்லை. தெருவுக்கு மூன்று கடைகள் முளைத்தாலும் அந்த கடைக்காரர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதில்லை.

ஏன் படித்து முடித்த வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞனுக்கு, ஏதேனும் தொழில் தொடங்கலாம் என்று நினைத்தால் முதல் யோசனையாக டீக்கடை தான் வந்து நிற்கிறது.

டீ குடிக்காமல் தலை வலிக்கிறது, பைத்தியம் பிடிக்கிறது, கை நடுக்கிறது என்று மது குடிப்பவர்கள் போல பல்வேறு காரணங்களை மக்கள் கூறும் நிலையில், அதிகமாக டீ குடித்தால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், இதனை தவிர்ப்பதற்கு உண்டான 17 வழி காட்டுதல்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

டீ, காஃபியில் காஃபின் என்ற மூலப்பொருள் அதிகம் இருப்பதாகவும், இது நம் நரம்பு மண்டலத்தை பாதிக்க கூடியது என்கிறது இந்த ஆராட்சி முடிவுகள்.

நாம் குடிக்கும் ஒரு காபியில் (150 மில்லி கிராம்) 80-120 மில்லி கிராம் காஃபின் உள்ளது. இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது. டீயில் 30-65 மில்லி கிராம் காஃபின் உள்ளது. ஆனால், ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுக்கு மேல் காஃபின் உட்கொள்ள கூடாது.

ஆக, ஒரு நாளைக்கு அதிகபட்சம் நீங்கள் 2 டீ அல்லது காபி அதற்க்கு மேல் குடிக்க வேண்டாம். அதையும் உணவு சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் குடிக்க வேண்டாம் என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.

காரணம் நம் உணவில் இருந்து உடலுக்குச் செல்லும் இரும்புச் சத்துக்கள் டீ, காபி போன்ற பானங்களால் தடைப்பட்டு, அனீமியா, ரத்த சோகை போன்ற உடல் நலக்குறைபாடு ஏற்படலாம். காபி குடிப்பது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.

அதே சமயத்தில் பால் சேர்க்காமல் தேநீர் குடித்தால் ரத்த ஓட்டம் சீராகிறது என்றும் வயிற்று புற்றுநோய் ஏற்படுவதறகான வாய்ப்பு குறைவு என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

டீ, காஃபிற்கு பதிலாக பழங்கள், காய்கறிகள், தானியங்கள், இறைச்சிகள், கடல் உணவுகளை சாப்பிடலாம். ஆகா இதான் வாய்ப்பென்று, எண்ணெய், சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு விடாதீங்க. குறைவான அளவே எடுத்து கொள்ளுங்கள். அதுதான் உங்கள் உடலுக்கு நல்லது என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்.