முகாம்களை அகற்றும் இந்திய தூதரகம்!! மேலும் விரிசலில் இந்தியா – கனடா!!

Photo of author

By Gayathri

முகாம்களை அகற்றும் இந்திய தூதரகம்!! மேலும் விரிசலில் இந்தியா – கனடா!!

Gayathri

Indian embassy to remove camps!! India - Canada on crack!!

கடந்த சில வாரங்களாகவே கனடா மற்றும் இந்தியாவின் இடையே பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கனடாவில் வாழ்ந்த காலிஸ்தான் அமைப்பின் தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்காக கனடா அரசு இந்தியாவை ஆறாவது சைபர் எதிரி நாடு என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இந்நிகழ்வு நடந்து இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிவதற்குள் கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான அடுத்த பிரச்சனையும் உருவாக்கியது.

கனடாவில் உள்ள பிராம்டன்னில் இந்து கோவில்களுக்குள் நுழைந்து இந்தியர்களை சரமாரியாக காலஸ்திணியர்கள் தாக்கியுள்ளனர். இதற்கு இந்தியா தரப்பில் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சனை இதோடு மட்டுமின்றி என்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காலிஸ்தான் ஆதரவாளர்களின் இந்த செயலானது இந்தியர்களுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக இருப்பதால் இந்திய தூதரகம் கனடாவில் அமைந்துள்ள முகாம்களை ரத்து செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய தூதரகம், “சமூக முகாம் அமைப்பாளர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பை பாதுகாப்பு ஏஜென்சிகளால் வழங்க முடியாததால், திட்டமிட்ட சில தூதரக முகாம்களை ரத்து செய்ய தூதரகம் முடிவு செய்துள்ளதாக அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.