காதலனை கரம் பிடித்த பெண்ணிற்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா !

Photo of author

By Parthipan K

வங்கதேசத்தில் உள்ள தனது காதலனை கரம் பிடிப்பதற்காக எல்லை தாண்டி சென்ற இந்திய பெண் கைதாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

அசாம் மாநிலத்தில் உள்ள தபார்பதார் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சுமா பேகம். இவர் வங்கதேசத்தில் போலீசாரால் தேடப்பட்ட 27 வயதான சட்டார் என்பவரை இந்தியாவில் இருந்து பொழுது காதலித்து வந்தார். அவர் காதலித்த இளைஞர் வங்கதேசத்தில் இருந்து தப்பித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓடி வந்தவர்.

சட்டார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அசாமில் இருந்து பஹ்ரைனுக்கு சென்றதாகத் தகவல் வெளியானது. இவர் இந்தியாவிலிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டட்டுள்ளது.

இந்நிலையில் இவர் நாடு திரும்பிய பின்னர் சமூக வலைதளங்களின் மூலம் இவர்களின் காதல் பரிமாறப்பட்டது. இவர்கள் இருவரின் காதலை அறிந்த அஞ்சுமா பேகத்தின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இவரின் பெற்றோர் இவருக்கு உள்ளூரில் மாப்பிள்ளை பார்த்து மணம் பேசி முடித்தனர்.

இதனை அறிந்த அஞ்சமா பேகம் வீட்டை விட்டு சென்று அங்கு தேசத்திலுள்ள தன் காதலனை திருமணம் செய்ய திட்டமிட்டார்.
தான் மாட்டிக்கொள்வோம் எனத்தெரிந்தும் தனது காதலுக்காக அவர் வங்கதேசத்திற்கு சென்றார். அதுமட்டுமல்லாமல் இவர் நூற்றுக்கணக்கான மீட்டர் பயணம் செய்து வங்கதேசத்தில் உள்ள தனது காதலனின் வீட்டை கடந்த செவ்வாய்க்கிழமை அடைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

பிறகு இவர்கள் வாட்ஸ்அப் வீடியோவ காலின் மூலம் டிஜிட்டல் முறையில் திருமணம் செய்து கொண்டனர். என்னதான் இது நல்ல காரியமாக இருந்தாலும் கூட இவர் பயண ஆவணங்கள் இல்லாமல் நாடு விட்டு நாடு சென்றதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவர்கள் இருவரும் முதன் முதலில் எங்கு சந்தித்தனர் இவர்கள் காதல் எங்கு நடந்தது என்பதற்கான எந்த தகவலும் இன்னும் சரியான விளக்கம் இல்லை. இது குறித்து தகவல் தெரிவிப்பதற்காக அப் பெண்ணின் வீட்டிற்கு தொடர்பு கொண்ட பொழுது அவர்களின் செல்போன் அணைக்கப்பட்டுவிட்டதாகவிட்டதாக வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த செய்தி ஒரு ஆங்கில பத்திரிக்கையிலும் வெளியானது குறிப்பிடத்தக்கது.