முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ராமநாதபுரம் வருகை – அரசுப் பணிகள் குறித்து ஆய்வு!

0
75

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இவர் நேற்று விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார், இரவு அங்கேயே தங்கிவிட்டு, இன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் 120 கோடி மதிப்பில் முடிவு பெற்ற பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். இனி நடக்கவிருக்கும் அரசின் நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ரூபாய் 24 கோடி மதிப்பில் முடிவு பெற்ற 84 திட்டப்பணிகளை திறந்துவைத்தார். மேலும் சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கவிருக்கும் 220 அரசு திட்ட  பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை பயணாளிகளுக்கு வழங்கினார்.

இதன்பின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிர்வாகிகளுடனும், மகளிர் சுய உதவிக் குழு நிர்வாகிகளுடனும் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளுடனும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்தாய்வு மேற்கொள்கிறார். மேலும் அரசு திட்ட பணிகளின் வளர்ச்சி குறித்து பல்வேறு துறை நிர்வாகிகளுடன் கலந்தாய்வு மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Parthipan K