டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய வம்சாவளியினர்… டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

0
98

டெஸ்லா நிறுவனத்தின் உயிர் பதவிக்கு இந்திய  வம்சாவளியினர்…டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்குமா?

 

 

டெல்லி பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பட்டதாரி டெஸ்லா நிறுவனத்தின் சிஎப்ஓ(CFO) ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது சிஎப்ஓ(CFO) ஆவார் . சிஎப்ஓ(CFO) என்பது முதன்மை நிதி அதிகாரி என்பதாகும்.

டெஸ்லா நிறுவனத்தின் புதிய சிஎப்ஓ(CFO) ஆக அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 7 அன்று அறிவிக்கப்பட்டுள்ளார் வைபவ் தனேஜா. இதற்கு முன்னர் பணியாற்றிய தீபக் அஜுஜா மும்பையில் பிறந்தவராவார். டெஸ்லாவில் பணிபுரிவதற்கு முன்பு வைபவ் தனேஜா உலக அளவில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளார் .அவர் அதன் பின் டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை கணக்கு அதிகாரியாக 2017ல் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிதி மேலாண்மை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கூறுகையில் டெஸ்லா நிறுவனத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருப்பது ஒரு சிறப்பான அனுபவம் மற்றும் நான் இதனை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன் என்றார் .

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்துள்ளதன் படி இந்தியா டெஸ்லாவின் அடுத்த உற்பத்தித்தளமாக இந்தியா விளங்கும் என்ற இலக்கின் படி அவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது எலான் மாஸ்க்கை சந்தித்து இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

டெஸ்லா நிறுவனம் தற்பொழுது உலக அளவில் நான்கு உற்பத்தி ஆலைகளை கொண்டுள்ளது. இதில் இரண்டு ஜிகா ஃபேக்டரி என்று அழைக்கப்படும் கார் மற்றும் கார்களுக்கு தேவையான பேட்டரிகளை உற்பத்தி செய்யும் இடம் ஆகும். இந்த இரண்டும் சாங்காய் மற்றும் பெர்லின் ஆகிய நகரங்களில் உள்ளது. இந்த மார்ச் மாதத்தில் டெஸ்லா நிறுவனம் மெக்சிகோவில் தன்னுடைய மூன்றாவது ஜிகா பேக்டரியை நிறுவ திட்டமிட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள தளமாகும்.

20 மில்லியன் மின்சார‌ வாகனங்களை 2030 ஆம் ஆண்டுக்குள் தயார் செய்யும் இலக்குடன் களமிறங்கியுள்ள டெஸ்லா தற்பொழுது மும்முரமாக செயல்பட்டு வருகிறது ஆனால் அதனுடைய தற்போதைய உற்பத்தி திறன் 13 .5 மில்லியன் எலக்ட்ரிக் வாகனங்கள் ஆகும்.

டெஸ்லா தற்போது அசெம்பிள் தளம் மற்றும் பேட்டரி தயாரிக்கும் தளங்களை முழு மூச்சுடன் தயார் செய்து வருகிறது. டெஸ்லா நிறுவனம் சிஎப்ஓ(CFO) ஆக இந்திய வம்சாவளியினரை நியமித்துள்ளது. இந்தியாவில் சாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.