இரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய சூரியக்குமார் யாதவ்… மூன்றாவது டி20 போட்டியை அதிரடியாக வென்ற இந்தியா!!

0
31

இரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றிய சூரியக்குமார் யாதவ்… மூன்றாவது டி20 போட்டியை அதிரடியாக வென்ற இந்தியா…

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூரியக்குமார் யாதவ் அவர்கள் அதிரடியாக விளையாடியதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியை இந்திய அணி அதிரடியாக வென்றுள்ளது.

 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி கைய்னாவில் நடைபெற்றது. மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயித்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரண்டன் கிங் டி20 போட்டியை டெஸ்ட் போட்டி போல விளையாடி 42 பந்துகளுக்கு 42 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரர் கெய்ல் மெயர்ஸ் 25 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய ரோவ்மேன் போவெல் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். நிக்கோலஸ் பூரண் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க ஹெட்மெயர் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

பந்துவீச்சில் இந்திய அணியில் சிறப்பாக வீசிய குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். முகேஷ் குமார், அக்சர் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 160 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

 

160 ரன்களை இலக்காகக் கொண்டு களிமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இஷான் கிஷன் 1 ரன்னுக்கும், சுப்மான் கில் 6 ரன்னுக்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

 

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சூரியக்குமார் யாதவ், திலக் வர்மா ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கத் தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி வெற்றிக்கான ரன்களை சேர்த்தனர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சூரியக்குமார் யாதவ் அரைசதம் அடித்து 83 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய திலக் வர்மா 49 ரன்களும் ஹார்திக் பாண்டியா 20 ரன்களும் சேர்க்க இந்தியா 17.5 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 164 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் மூன்றாவது டி20 போட்டியை இந்திய அணி வென்றது.

 

இந்திய அணியில் வீழ்ந்த மூன்று விக்கெட்டுகளில் அல்சாரி ஜோசப் இரண்டு விக்கெட்டுகளையும், மெக்காய் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த சூரியக்குமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி வென்ற பொழுதும் 5 டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.