பங்களாதேஷில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களின் நுழைவு வாசல்களில் இந்திய தேசிய கொடிகளை கால் மீதியாக பயன்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பங்களாதேஷில் உள்ள முக்கியப் பல்கலைக் கழகங்களான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET), டாக்கா பல்கலைக்கழகம் (கனிட் பவன்) மற்றும் நோகாலி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பல்கலைக்கழகங்களின் முக்கிய வாசல்களில் இந்திய தேசிய கொடிகள் கால் மிதிகளாக பயன்படுத்தும் போட்டோ மற்றும் வீடியோ இந்தியர்களிடையே மிகப்பெரிய கண்டனங்களையும் கோபத்தையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
பங்களாதேஷில் இந்துக்கள் மீது அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில், இந்துக்களைப் பாதுகாக்க இஸ்கான் நாளை டிசம்பர் 1ம் தேதி உலகளாவிய ‘அமைதிக்கான பிரார்த்தனை’ நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த நிறுவனங்களின் வாயில்களில் வேண்டுமென்றே இந்திய தேசிய கொடியை மிதிப்பது போன்று வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமாக தெரிகிறது. இது குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியான நிலையில், இது இந்தியா முழுவதும் பரவலான சீற்றத்தைத் தூண்டி கடும் கண்டனங்களைக் குவித்து வருகிறது.
இது குறித்த கண்டனங்களை காண்போம் :-
“வங்காளதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வாயிலில் இந்தியக் கொடி வரையப்பட்டுள்ளது. இது இந்தியாவை நேரடியாக அவமதிக்கும் செயலாகும்” என்று X ல் ஒரு பயனர் கூறியுள்ளார்.
மேலும், பல சமூக ஊடக பயனர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய குடிமக்களின் அழைப்புகள் உட்பட பல ட்வீட்கள், இந்திய பல்கலைக்கழகங்களில் இருந்து பங்களாதேஷ் மாணவர்களை இந்திய அரசாங்கம் நாடு கடத்த வேண்டும் என்று கோரியுள்ளன.
மற்றொரு ஆத்திரமடைந்த பயனர், “பங்களாதேஷ் முஸ்லிம்கள் இந்தியாவையும் இந்துக்களையும் வெறுக்கிறார்கள். கல்வி அமைச்சகம் அனைத்து முஸ்லிம் பங்களாதேஷ் மாணவர்களையும் பங்களாதேஷிற்கு திருப்பி அனுப்ப வேண்டும். டெல்லி மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகங்களில் 1000 பங்களாதேஷ் மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்” என்றும் பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.