சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்!

0
176

சீறிய வேகப்பந்து வீச்சாளர்கள்.. பதுங்கிய ஸ்பின்னர்கள்… இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு கொடுத்த பாகிஸ்தான்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது.

இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இன்று பாகிஸ்தானோடு விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது.

இரண்டாவது ஓவரில் பாபர் அசாமையும், நான்காவது ஓவரில் முகமது ரிஸ்வானையும் அவுட் ஆக்கி இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார் அர்ஷ்தீப் சிங். அதையடுத்து பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் சீரான இடைவெளியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட்களைக் கைப்பற்றி வந்தனர்.

அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர். முகமது ஷமி மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர். ஆனால் இந்திய அணியின் சுழல்பந்து வீச்சாளர்களான அஸ்வின் அக்சர் படேல் ஆகியோர் விக்கெட் எடுக்க முடியாமல் ரன்களை வழங்கினர்.

பாக் அணியின் இப்திகார் அகமது மற்றும் ஷான் மசூத் ஆகியோர் அரைசதம் அடித்து பாகிஸ்தான் அணியை கௌரவமான ஸ்கோர் சேர்க்க உதவினர். 20 ஓவர்கள் முடிவில் பாக் அணி 8 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத ஷான் மசூத் 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தற்போது பேட்டிங்கை தொடங்கி ஆடி வருகிறது.

Previous articleமீண்டும் இயக்குனர் ஆகும் எஸ் ஜே சூர்யா… 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம்!
Next articleசென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!