இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி மூன்றாவது நாளான இன்று பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது 4 வது போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த நான்காவது போட்டி மற்றும் அடுத்து நடக்க உள்ள 5 வது போட்டியிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த தொடரில் மொத்தம் 4 போட்டிகளில் வெல்ல வேண்டும் என்று இருத்த நிலையில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது, ஒரு போட்டியில் சமன் செய்துள்ளது.
இந்நிலையில் இந்திய அணி இன்று பேட்டிங் செய்து வருகிறது. மூன்றாவது நாளாக இன்று தொடங்கிய போட்டியில் முக்கிய வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா இருவரும் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசிய அதை புஷ்பா பாணியில் பேட்டால் செய்து கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். அது தற்போது வைரலாகி வருகிறது.