ஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ!

0
327

ஜிம்பாப்வே தொடர் வெற்றி… ஜாலியாக ஆட்டம் போட்ட இந்திய அணி… வைரல் வீடியோ!

இந்திய அணி ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் வொய்ட் வாஷ் செய்து வெற்றி பெற்றுள்ளது.

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி அங்கு மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இந்தியாவில் மூத்த நட்சத்திர வீரர்கள் அதிகம் இல்லாமல் சென்ற இந்திய அணியில் ஷிகார் தவான் மற்றும் கே எல் ராகுல் போன்ற ஒருசில மூத்த வீரர்களே இடம்பெற்றிருந்தனர்.

இந்நிலையில் அங்கு நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.  நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் சுப்மன் கில்லின் அதிரடி சதத்தின் மூலம் இந்தியா 289 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி போராடி 276 ரன்கள் சேர்த்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

சிறப்பாக இந்த தொடர் முழுவதும் விளையாடிய ஷுப்மன் கில் ஆட்டநாயகனாகவும் தொடர்நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இந்திய அணியினர் தங்கள் ஒய்வறையில் ஜாலியாக இணைந்து பாலிவுட் பாடல் ஒன்றுக்கு ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவை மூத்த வீரரான ஷிகார் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது இப்போது வைரலாகி வருகிறது.

http://https://www.instagram.com/reel/ChkXuF0j1-l/?utm_source=ig_web_copy_link

Previous articleதமிழக அரசுப் பள்ளிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கல் ! மாணவர்கள் உற்சாகம்!
Next article“குறைகளுக்காக மன்னிச்சுடுங்க… அடுத்த படம் நல்ல படமா இருக்கும்…” குருதி ஆட்டம் இயக்குனரின் எமோஷனல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here