இந்தியன் ரயில்வேஸ் அறிவித்த மாற்று திறனாளிகளுக்கான புதிய அறிவிப்பு!!

ரயிலில் பயணம் செய்யும் மாற்று திறனாளிகளுக்கு 75% கட்டண சலுகையுடன் அடையாள அட்டை ஆனது வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், இந்த சலுகையினை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்றிதழை பயன்படுத்தி கட்டண சலுகை வழங்கப்பட்டது.

குறிப்பாக இந்த அடையாள அட்டையினை பெறுவதற்கு ரயில்வே கோட்ட அலுவலகங்களுக்கு சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து பிறகு அடையாள அட்டை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நடைமுறைகளை எளிதாக்கி மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே அடையாள அட்டை பெற புதிய இணையதள வசதியை அறிமுகப்படுத்தியது இந்திய ரயில்வே.

புதிய இணையதள சேவையின் மூலம் அடையாள அட்டை பெற கீழ்கண்டவற்றை பின்பற்றவும் :-

✓ இதன்படி, அடையாள அட்டை பெற மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களை அரசு இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாள அட்டையை பயன்படுத்தி ரயில்வே பயணச் சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணையதளம் வாயிலாகவும் பயணச்சீட்டு முன்பதிவு செய்யலாம். மேலும், யூடிஎஸ் செயலி மூலமும் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகள் பதிவு செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண சலுகை விதிமுறைகளும் இந்த இணையதளத்தில் உள்ளது என மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.