இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!!

0
128
Indian team coach change!! Rest for Rahul Dravid and others!!
Indian team coach change!! Rest for Rahul Dravid and others!!

இந்திய அணியின் பயிற்சியாளர் மாற்றம்!! ராகுல் டிராவிட் உள்ளிட்டோருக்கு ஓய்வு!!

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது அங்கு இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மேலும் ஐந்து டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது.

இதற்கு முன்பு நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியானது 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகையை சூடியது. இதனையடுத்து இந்திய அணியானது, அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது.

இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இந்த தொடரானது நடைபெற இருக்கிறது.

அதன்படி, ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியா-அயர்லாந்து முதல் டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இதன் இரண்டாவது டி20 போட்டியானது ஆகஸ்ட் 20 அன்று நடைபெறும்.

மேலும், இந்தியா-அயர்லாந்திற்கு இடையேயான மூன்றாவது டி20 ஆகஸ்ட் மாதம் 23 நடைபெறும். மேலும், இந்த அனைத்து போட்டிகளுமே மலாஹிட் பகுதியில் பிற்பகல் மூன்று மணி அளவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ன் இறுதி போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி என்று பிஸியாக இருக்கும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக இந்திய அணியானது ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது.

எனவே, ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை தொடர் காரணமாக அயர்லாந்து தொடருக்கு பயிற்சி அளிப்பதில் இருந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு உள்ளிட்ட பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு பதிலாக, தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படப்போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Previous articleஇன்னும் 6 நாட்கள் தொடரும் மழை மீனவர்களுக்கு எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!! 
Next article10 வினாடிகளுக்கு குறைவாகத் தான் தொட்டார்!! அது அந்த மாதிரி தொடுதல் இல்லை நீதிமன்றம் வழங்கிய அதிர்ச்சி தீர்ப்பு!!