இந்திய அளவில் டாப் டென் நடிகர் பட்டியல் வெளியீடு!!! நடிகர் விஜய், அஜித், சூர்யாவுக்கு கிடைத்த இடம் என்ன!!?

Photo of author

By Sakthi

இந்திய அளவில் டாப் டென் நடிகர் பட்டியல் வெளியீடு!!! நடிகர் விஜய், அஜித், சூர்யாவுக்கு கிடைத்த இடம் என்ன!!?

Sakthi

இந்திய அளவில் டாப் டென் நடிகர் பட்டியல் வெளியீடு!!! நடிகர் விஜய், அஜித், சூர்யாவுக்கு கிடைத்த இடம் என்ன!!?

இந்திய அளவில் டாப் 10 பிரபல நடிகர்களின் பட்டியலை ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய், அஜித், சூரியா ஆகிய மூன்று தமிழ் நடிகர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லக்ஸ் நிறுவனம் செப்டம்பர் மாதத்திற்கான இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களின் பட்டியலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான பிரபலமான நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ஷாருக்கான் அவர்கள் உள்ளார்.

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லக்ஸ் நிறுவனம் வெளியிட்ட இந்திய அளவில் பிரபலம் அடைந்த நடிகர்களின் பட்டியலில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் விஜய் அவர்கள் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் அவர்கள் 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான பிரபலமடைந்தவர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் நடிகர் அஜித் இந்த பட்டியலில் ஆறாவது இடத்திலும், நடிகர் சூரியா ஒன்பதாவது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் பிரபல ஹிந்தி நடிகர் அக்சய் குமார் 4வது இடத்திலும் சல்மான் கான் 5வது இடத்திலும் உள்ளனர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு அவர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் நிறுவனம் வெளியிட்ட 2023ம் ஆண்டு செப்டம்பர் மாத்திற்கான இந்திய அளவில் பிரபலமடைந்த நடிகர்களின் பட்டியல் இதோ…

01. ஷாரூக்கான்

02. விஜய்

03. பிரபாஸ்

04. அக்சய் குமார்

05. சல்மான் கான்

06. அஜித்

07. ஜூனியர் என்.டி.ஆர்

08. அல்லு அர்ஜூன்

09. சூரியா

10. மகேஷ் பாபு