மதம் குறித்த அவதூறு பதிவு – அரேபியாவில் வேலையை விட்டு நீக்கப்பட்ட இந்தியர்

0
112

கடந்த சில வருடங்களாக மற்ற மதத்தை இழிவுபடுத்தி சமூக வலைத்தளங்களில் பகிர்வதை சில விஷமிகள் செய்து வருகின்றனர்.

சமீபத்தில் இஸ்லாம் மதம் குறித்து இந்தியர்கள் சிலர் பதிவு செய்வதை குறித்து அரபு நாட்டை சேர்ந்த ஆட்சியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது போன்ற இழிவான செயல்கள் அவர்கள் நாட்டில் அதிக அளவில் வேலை பார்க்கும் இந்தியர்களை பாதிக்கும் எனவும் கூறியிருந்தனர்.

இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன் மதம் குறித்த அவதூறான பதிவால் அரேபிய அரசு நிறுவனத்தில் வேலை செய்து வந்த இந்தியர் வேலையை விட்டு தூக்கப்பட்டு இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சிலுள்ள ராஸ் அல் கைமா எனும் இடத்திலுள்ள சுரங்க நிறுவனத்தில் பணி செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரஜ்கிஷோர் தனது ஃபேஸ் புக் பதிவால் வேலை இழந்துள்ளார்.

அவர் தனது ஃபேஸ்புக் பதிவில் இந்தியாவில் கொரோனா பரவியதற்க்கு சிலர் தான் காரணம் என்று குறிப்பிட்டிருந்தவர், டில்லியில் நடந்த வன்முறையை ‘தெய்வீக நீதி’ என கூறியிருக்கிறார்.

இதனையடுத்து இவரை வெலையிலிருந்த் நீக்கியுள்ள நிர்வாகம் “சகிப்புத்தன்மை, சமத்துவம் ஆகியவற்றை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்து, அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற நடத்தையை நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது. மீறினால், பதவி நீக்கம் செய்யப்படுவர்” என்று கூறியுள்ளது.

வேலைக்கு சென்ற நாட்டில் அதை மட்டும் செய்து வந்தால் இந்த நிலை வந்திருக்குமா?

Previous articleஅந்த போட்டியில் நான் சச்சினுடன் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்! விராட் கோலி ஓபன் டாக்
Next articleஇந்தியாவில் கொரோனா தொற்று 1 லட்சத்தை எட்டியது : நீளும் பட்டியலால் பதற்றத்தின் உச்சத்தில் மக்கள்..!!