ஒலிம்பிக் மல்யுத்தம் ஆடவர்களுக்கான 57 கிலோ ஃப்ரீ ஸ்டைல் எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் 57 கிலோ எடைப் பிரிவில் இன்று காலை நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா பல்கேரியாவின் வாலண்டினா வாங்கலோவை 14-4 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
அதனைத்தொடர்ந்து மதியம் 2.30 மணியளவில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா, கஜகஸ்தான் வீரர் நூரிஸ்லாம் சனேயாவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியின் முடிவில் 9-2 என்ற கணக்கில் நூரிஸ்லாமை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். இதனால் தற்போது இந்தியாவிற்கு குறைந்தபட்சம் வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது. இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது.
https://twitter.com/WeAreTeamIndia/status/1422852299609706496?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1422852299609706496%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=http%3A%2F%2Fapi-news.dailyhunt.in%2F