இந்தியன் 2 திரைப்படம் குறித்து வெளியான தகவல்! நடிகர் கமல்ஹாசன் என்ன சொல்கிறார்?
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் இந்தியன்.இந்தத் திரைப்படமானது 1996ம் ஆண்டு வெளிவந்தது.இயக்குனர் ஷங்கர் இந்த திரைப்படத்தை இயக்கியிருப்பார்.ஏ.எம்.ரத்னம் இந்த திரைப்படத்தை தயாரித்தார்.இந்த படத்தில் மனிஷா கொய்ராலா,கவுண்டமணி,சுகன்யா,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர்.கமல்ஹாசன் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார்.
இந்தியன் திரைப்படம் அதிக பொருட்செலவில் பிரம்மண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது.ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பார்.இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.மேலும் இந்த படத்திற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் கிடைத்தது.இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது எடுக்கப்பட்டு வருகிறது.இயக்குனர் ஷங்கர் இந்த படத்தை இயக்குகிறார்.நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார்.
காஜல் அகர்வால் நாயகியாக இந்த படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் 60 சதவீதம் முழுமையடைந்துள்ளது.சில நாட்களாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் நடிக்கும் விக்ரம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இயக்குனர் ஷங்கரும் நடிகர் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றை இயக்கி வருகிறார்.நடிகர் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2 திரைப்படத்திற்கான பிரச்சனைகள் முடிவடைந்து விட்டன.அதனால் விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தெரிவித்தார்.விக்ரம் திரைப்படத்தில் நடித்து முடித்தவுடன் இந்தியன் 2 படப்பிடிப்பில் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் பிறகு மலையாள இயக்குனர் மற்றும் எடிட்டர் மகேஷ் நாராயணனுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதற்காக தற்போது கதை எழுதி வருவதாகவும் அவர் கூறினார்.நடிகர் கமல்ஹாசனின் ரசிகர்கள் இந்த செய்தியால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.