“WhatsApp”- இல் தடுப்பூசி போட முன்பதிவு செய்யலாம்! எப்படி? இதோ!

0
63

கொரோனா தடுப்பூசி போட்ட சான்றிதழ்களை வாட்ஸ் ஆப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று முன்னரே சொல்லப்பட்டிருந்தது. MyGov என்ற ஹெல்ப் டெஸ்க்கிற்க்கு நாம் குறுஞ்செய்தி அனுப்பி தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்து கொள்ளலாம். எந்த இடங்களில் வேண்டும் என்பதையும் நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

 

தற்பொழுது வாட்ஸ்அப் பயனர்கள் அதிகமாக உள்ளதால் வாட்ஸப்பில் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சொல்லப்பட்ட ஒரு புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இப்பொழுது தடுப்பூசி எந்த இடத்தில் இருக்கிறது எந்த இடத்திற்கு வேண்டும் என்றும் நாம் தெரிந்து கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 

புதிய அம்சத்தைப் பற்றி பேசுகையில், அபிஷேக் சிங், தலைமை நிர்வாக அதிகாரி MyGov “MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு பயனளிக்கும்.இது குடிமக்களுக்கு உண்மையான கொரோனா தொடர்பான தகவல்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல் இப்போது அவர்களுக்கு தடுப்பூசி முன்பதிவு செயல்முறை மற்றும் தடுப்பூசி மையங்கள் மற்றும் இடங்களை கண்டறிதல் மற்றும் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்தல். போன்றவற்றிற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மேலும் வாட்ஸ் அப்பிற்கு நன்றி தெரிவித்த அவர் தொற்றுநோயின் கடினமான காலங்களில் குடிமக்களின் உதவி மற்றும் ஈடுபாட்டிற்காக உதவியதற்காக நன்றி தெரிவித்தார்.

 

வாட்ஸ்அப்பில் MyGov செயலியை பயன்படுத்தி 32 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, நீங்கள் உங்கள் கோவிட் -19 தடுப்பூசியை இன்னும் போடவில்லை எனில், பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி நீங்கள் இடத்தைப் பதிவு செய்யலாம்.

 

1. முதல் மற்றும் மிக முக்கியமான ஒன்று MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் எண் 9013151515 இதை உங்கள் போனில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

2. எண்ணைச் சேமித்த பிறகு, வாட்ஸ்அப்பில் இந்த எண்ணுக்கு “புக் ஸ்லாட்” ( Book Slot)என்று அனுப்பவும்.

3. MyGov உங்கள் ஆறு இலக்க OTP ஐ SMS மூலம் உங்களுக்கு அனுப்பும்.அதை எண்ணை உள்ளிடவும்.

4. உங்கள் எண்ணுடன் CoWin போர்ட்டலில் இருக்கும் உறுப்பினர்களின் பட்டியலை MyGov காண்பிக்கும்.

5. நீங்கள் 1,2,3 விருப்பங்களுக்கு இடையே தேர்வு செய்யலாம்.

6. உங்களது பகுதி பின்கோடு (Pincode) உள்ளிடவும். அதற்கு ஏற்றார் போல அந்தப் பகுதியில் தடுப்பூசி மையங்கள் மற்றும் அதன் கட்டணத்துடன் MyGov உங்களுக்கு அனுப்பும்.

7. உங்கள் ஏற்ற நாளை உறுதிசெய்து, நீங்கள் உறுதி செய்த நாளில் தடுப்பூசி மையத்தைப் பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொள்ளவும்.

author avatar
Kowsalya