கனடா கோயிலில் தாக்கப்பட்ட இந்தியர்கள்!! இந்தியா – கனடா இடையே முற்றும் பகை!!

Photo of author

By Gayathri

கனடா கோயிலில் தாக்கப்பட்ட இந்தியர்கள்!! இந்தியா – கனடா இடையே முற்றும் பகை!!

Gayathri

Indians attacked in Canada temple!! Total enmity between India and Canada!!

பிராம்டன் பகுதியில் உள்ள கோயிலில் இந்துக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது காலிஸ்தான் மூலம் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதால், இந்திய மக்களிடையே இது கடும் கண்டனத்தை பெற்று வருகிறது. மேலும் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ மற்றும் பல அரசியல் தலைவர்களும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே கனடா அரசு இந்தியாவை தங்களுடைய எதிரி நாடு என்று தடை விதி தெரிந்த நிலையில், கனடாவில் உள்ள இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், டொரன்டோ தூதரக முகாமிற்கு வெளியே போராடிய காலிஸ்தான் பயங்கரவாதிகளால் திட்டமிட்டு இந்து கோயில்கள் மற்றும் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில், “பிராம்டன் பகுதியிலுள்ள இந்து சபா கோவிலில் நடந்த வன்முறை சம்பவங்கள் ஏற்கத்தக்கதல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் நம்பிக்கையை சுதந்திரமாக, பாதுகாப்பாக பின்பற்றும் உரிமை உண்டு. துரிதமாக செயல்பட்டு மக்களை பாதுகாத்த காவல்துறைக்கு பாராட்டுகள்” என்று தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.