அமெரிக்காவின் பனாமா காட்டில் ஒளிந்திருந்த இந்தியர்கள்!! நாங்கள் ஏமாற்றப்பட்டது இப்படித்தான்.. வெளிச்சத்திற்கு வந்த உண்மை!!

Photo of author

By Gayathri

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 104 பேரை அமிர்தசரத்தில் இருக்கக்கூடிய சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க போர் விமானம் ஆனது கொண்டு வந்து விட்டிருக்கிறது. இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் கைகள் மற்றும் கால்களில் சங்கிலிகள் பூட்டப்பட்டு இந்தியாவில் இறக்கி விடும்பொழுது அந்த சங்கிலிகள் ஆனது அவிழ்த்து விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் தங்களை முறையாக அமெரிக்காவிற்கு கூட்டி செல்வதாக இடைத்தரகர்கள் கூறியதை நம்பி 30 முதல் 40 லட்சம் ரூபாய் வரை கொடுத்து ஏமாந்து இருப்பதாகவும் இந்த பணத்திற்காக தங்களுடைய சொந்த நிலம் வீடு என அனைத்தையும் விற்று அதன் பிறகு ஏமாற்றப்பட்டதன் விளைவாக அமெரிக்காவில் இவ்வாறு முறைகேடான முறையில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றும் தங்களுடைய நிலையை விளக்கியுள்ளனர்.

இவ்வாறு முறைகேடான முறையில் அமெரிக்காவில் தங்கப்பட்டவர்கள் என அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் தங்களுடைய பயணத்தை பனாமாவில் இருந்து தொடங்கி அதன்பின் கோஸ்டாரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் மற்றும் குவாத்தமாலாவுக்குச் சென்று மெக்சிகோ எல்லையில் இருந்து அமெரிக்காவில் நுழைந்ததாக தெரிவித்திருக்கின்றனர். இவ்வாறு பயணிக்கும் பொழுது பனாமாவின் சதுப்பு நிலக்காடுகளில் கூடாரங்களிட்டு தாங்கள் தங்கி இருந்ததாகவும். தங்களுடைய மனைவிகள் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டு டென்டின் அருகில் இருந்ததாகவும் ஆண்கள் ரப்பர் ஷூக்களை அணிந்து சேற்றில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அமெரிக்காவில் முறைகேடான முறையில் தங்கி இருந்த இந்தியர்கள் அனைவருமே வெவ்வேறு முகவர்களை நம்பி தங்களுடைய சொத்துக்களை இழந்து நாடோடிகளாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்தவர்களாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். இவ்வாறு வாழ்ந்த அவர்களையே தற்போது அமெரிக்காவானது நாடு கடத்தி பஞ்சாபில் இருக்கக்கூடிய அமிர்தச சர்வதேச விமான நிலையத்தில் கொண்டு வந்து விட்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் வருகிற வாரம் நரேந்திர மோடி அவர்கள் அமெரிக்காவிற்கு சென்று அமெரிக்க பிரதமரை நேரில் சந்தித்த பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.