இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் நாட்டுக்கு வர விதிக்கப்பட்டு
இருந்த தடையை, ஐக்கிய அரபு அமீரகம் வாபஸ் பெற்றுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச்
சேர்ந்தவர்கள், வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர, அந்நாட்டு அரசு
தடை விதித்து இருந்தது.
இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில், அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல்,
எக்ஸ்போ 2020′ என்ற பிரமாண்ட வர்த்தக கண்காட்சி துவங்க உள்ளது. கடந்த ஆண்டே நடைபெற இருந்த
இந்த கண்காட்சி கொரோனா காரணமாக தள்ளிப்போனது. ‘பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள, இந்த வர்த்தக கண்காட்சி துவக்கமாக இருக்கும்’
என, துபாய் நிர்வாகம் நம்புகிறது.
இந்நிலையில் ‘இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட 15
நாடுகளைச் சேர்ந்த இரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வர தடை
இல்லை’ என, அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.