உலகிலேயே முதன் முதலில் இணை செயற்கைக்கோள்.. ஏவ தயாராகும் இந்திய PSLV ராக்கெட் ..

Photo of author

By Gayathri

இஸ்ரோ: “இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்”. இதன் முக்கிய நோக்கம், விண்வெளி தொழில்நுட்பத்தில் உள்ள மேம்பாடுகளை ஆராய்ந்து அவற்றை நாட்டின் முன்னேற்றத்திற்காக செயல்படுத்துவது ஆகும்.

இஸ்ரோ உலக அளவில் “6வது” பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனமாக விளங்குகிறது.

இந்நிலையில் “ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம்”, சூரியனைப் பற்றிய ஆய்வுக்காக “இணை செயற்கைக் கோள்களை” உருவாக்கி உள்ளது. இது “சூரியனின் ஒளி வட்ட பாதையை” ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்விற்கு “புரோபா – 3” என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த இணை செயற்கைக்கோள்கள், இரண்டும் ஒன்றுக்கொன்று “150 மீட்டர்” இடைவெளியில் இணையாக பயணித்து, ஒரு நாளைக்கு “6 மணி நேரம்” சூரியனின் ஒளி வட்ட பாதையில், தனது ஆய்வை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் இடைவெளியை சரியாக மதிப்பிட்டு, இரு கோள்களும் இணையாக பயணிப்பதற்காக, “அட்வான்ஸ் லேசர் சோன் டெக்னாலஜி மற்றும் ரெப்லெக்டர்” கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கருவிகள், இரு செயற்கைக்கோள்களையும் “நீள்வட்ட சுற்றுப்பாதையில் 600 X 60530”
என்ற கணக்கில் நிலை நிறுத்தி, செயற்கைக்கோள்கள் சுற்றுவட்டப் பாதைக்கு வந்தவுடன், மோதல்கள் நடைபெறாமல் இருக்க, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்,பின் இரு செயற்கைக்கோள்களும், ஒன்றுக்கொன்று இணையாக, சரியான இடைவெளியில் பயணிப்பதை உறுதி செய்யும்.

இந்த இணை செயற்கைக்கோள்கள் மூலம் தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய “சிறிய அளவிலான சிக்னல்களையும்”, விஞ்ஞானிகள் கண்டறிந்து ஆய்வு செய்ய முடியும்.,

ஒரு செயற்கைக்கோளில் மிக அதிகமான எடை கொண்ட பெரிய அளவிலான கருவிகளை பொருத்த முடியாது என்பதால், இணை செயற்கைக்கோள்களாக உருவாக்கப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது .

இந்த இணை செயற்கைக்கோள்களை, “இஸ்ரோ விண்வெளி நிறுவனம்”, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ” மூலம் வரும் “டிசம்பர் 4ஆம்” தேதி, “PSLV ராக்கெட்”, உதவியுடன் விண்ணில் செலுத்துகிறது.