இந்த பொருட்களுக்கு 15 சதவீதம் வரி அதிகரிப்பு! இந்தியா கொடுத்த பதிலடி!

0
202
India's response! 15 percent tax hike on these items!
India's response! 15 percent tax hike on these items!

இந்த பொருட்களுக்கு 15 சதவீதம் வரி அதிகரிப்பு! இந்தியா கொடுத்த பதிலடி!

கடந்த ஆகஸ்ட் ஐந்தாம் தேதி பிரிட்டன் இடையே காணொலி வழியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு இந்தியாவின் குறிப்பிட்ட உருக்கு பொருள்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையில் கூடுதல் சுங்கக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா தரப்பில் கூறப்பட்டிருப்பது இந்திய உருக்கு பொருள்கள் மீது பிரிட்டன் பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது.

அந்த நடவடிக்கை காரணமாக இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி 2,19,000 டன் அளவுக்கு குறைந்துள்ளது.இந்த கூடுதல் சுங்கக் கட்டண விதிப்பு மூலமாக பிரிட்டனுக்கு வரி வருவாய் ரூ 2,000 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.இதனை ஈடு செய்யும் விதமாக பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வர்த்தக ஒப்பந்தம் மற்றும் கட்டணங்கள் 1994இன் கீழ் அளிக்கப்பட்டு வந்த சுங்கக் கட்டணச் சலுகையை இந்தியா ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சுங்கக் கட்டணச் சலுகையை ரத்து செய்யும் இறக்குமதி பொருட்கள் ஸ்காட்ச் ,விஸ்கி ,ஜின் ,கால்நடை தீவனம் ,பாலாடைக் கட்டி ,திரவ புரோபேன் ,அத்தியாவசிய எண்ணெய் வகைகள் ,அழகுசாதன பொருட்கள்,பட்டை தீட்டப்படாத வைரம் ,வெள்ளி ,பிளாட்டினம் ,டீசல் ,என்ஜின் துணை உதிரிபாகங்கள் உட்பட 22 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் மீது 15 சதவீதம் கூடுதல் சுங்கக் கட்டணம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்தியாவின் உருக்கு பொருள்கள் மீதான பிரிட்டனின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் வரை இந்தியாவின் சுங்கக் கட்டண சலுகை ரத்து செய்யப்படும் நடவடிக்கையும் தொடரும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

Previous article“வாழ்க்கையிலேயே முதல் முறையாக பொறாமைப்படுகிறேன்…” நடிகை மீனாவின் பொன்னியின் செல்வன் பதிவு!
Next articleபள்ளிப்படிப்பை கைவிடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! பள்ளிக் கல்வித் துறை ஆய்வில் அதிர்ச்சி தகவல்!