இந்தியாவின் உயரமான மனிதராக சொல்லப்படுபவர் தர்மேந்திர பிரதாப் சிங். அவர் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் உத்தரப்பிரதேச மாநில சமாஜ்வாதி கட்சித் தலைவர் நரேஷ் உத்தம் பட்டேல் தலைமையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அகிலேஷ் யாதவின் தலைமை மீது கொண்ட பற்றின் காரணமாக, கட்சியில் இணைந்து கொண்டதாக 8புள்ளி 1 அடி உயரம் கொண்ட உயர்ந்த மனிதர் தெரிவித்துள்ளார். பிரசாரக் கூட்டங்களில் தர்மேந்திரா சிங் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித தேர்தலிலும் போட்டியிடுவார் எனத் தெரிவிக்கப் படவில்லை.