சேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

0
161

சேலம் நாமக்கல் செங்கல்பட்டு தொடர் 5 மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்! தமிழக அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

சேலம் ,நாமக்கல், செங்கல்பட்டு, திருவண்ணாமலை ,புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மூலம் ரூ.171.24 கோடி மதிப்பில் தொழிற்பேட்டை உருவாக உள்ளது. இந்த தொழிற்பேட்டைகள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் மொத்தம் 22 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

அதில் 15,000 பேர் மறைமுகமாகவும் மீதமுள்ள 7,000 பேர் நேரடியாகவும் தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் முதலாவதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ,ஆலத்தூர் கிராமத்தில் 67.96 ஏக்கர் அளவில் தொழிற்பேட்டை நிருவ உள்ளனர். இங்கு மறைமுகமாக 2000 பேரும் நேரடியாக 4000 பேரும் வேலைவாய்ப்பினை பெறுவர் என்று தெரிவித்துள்ளனர்.

அதனை அடுத்து சேலம் மாவட்டம் சீரகாபாடி கிராமத்தில் 58 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்க உள்ளனர். இங்கு 1000 பேர் நேரடியாகவும் 2000 பேர் மறைமுகமாகவும் வேலைக்கு தேர்வு செய்யப்படுவர் என கூறுகின்றனர். இதேபோல நாமக்கல் மாவட்டத்தில் ராசாம்பாளையம் என்ற கிராமத்தில் 38 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் தொழிற்பேட்டை நிறுவ உள்ளனர்.

நேரடியாக மற்றும் மறைமுகமாக மொத்தம் 3600 பேருக்கும் பணி நிமிர்த்தம் செய்யப்படுவர் என்று தெரிவித்துள்ளனர். இந்த மாவட்டங்களைப் போல இதர மாவட்டங்களிலும் தொழிற்பேட்டை நிறுவி அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் செயல்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். காணொளி வாயிலாக மு க ஸ்டாலின் இந்த ஐந்து மாவட்டங்களிலும் தொழிற்பேட்டையை துவங்கி வைத்தார்.

Previous articleஒயின் ஷாப்பிற்கு இப்படி சென்றால் தான் இனி சரக்கு! அரசின் அதிரடி உத்தரவு!
Next articleமெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!