மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

0
67

 

மெயிலில் இப்படிக்கூட நடக்குமா? உஷாராக இருங்கள்!

முன்பு ஒரு தகவலை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் மூலம் தான் பரிமாறிக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது நாம் அனைவரும் டிஜிட்டல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரிமாறிக் கொள்வதற்கு எண்ணற்ற வழிமுறைகள் உள்ளது. அதில் ஒன்று மின்னஞ்சல். மின்னஞ்சலில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தி அனுப்பினால் அது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் எனவும் கூறப்படும். ஆனால் தற்போது அந்நிலை மாறி மின்னஞ்சலில் மூலம் பண மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதை காணலாம். இந்த பணம் மோசடியைத் தடுப்பதற்காக வழிமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வழிமுறையை அனைவரும் பின்பற்றினால் மின்னஞ்சல் மூலம் பண மோசடி நடைபெறுவதை முற்றிலும் தவிர்க்கலாம் எனவும் கூறுகின்றனர். மின்னஞ்சலில் சில வகைகள் உள்ளது அவை Gmail, Yahoo, outlook ஆகும். ஒரு யூசர் இருக்க இந்த வகையில் உள்ள மின்னஞ்சல் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். குறுஞ்செய்தியானது  ஒரு நிறுவனத்தில் இருந்து உங்களுக்கு ஒரு டெலிவரி வந்துள்ளதாகவும் அதனைப் பெறுவதற்கு ஆன்லைன் மூலம் பணம் செலுத்துமாறும் கூறப்பட்டிருக்கும். உண்மையானதா என்பதனை கண்டறிய ,வந்த இணைப்பின் மேல் clik செய்து பார்க்க வேண்டும். அப்போது அதில் DHL முகவரிக்கு பதிலாக BHL எனவும் காணப்படும். அப்படி UPS ப்ரொபைலை கண்டால் அந்த அஞ்சல் ஆனது போலியானது என தெரிந்து கொள்ளலாம். எந்த ஒரு சேவைகளிலும் டெலிவரி சட்டமானது வசூலிக்கப்படுவதில்லை. இவ்வாறு மின்னஞ்சல் மூலம் டெலிவரிக்கு பணம் கேட்டிருந்தால் அது பொய்யான மின்னஞ்சல் எனவும் தெரிந்து கொள்ள வேண்டும்.  இது தெரிந்திருந்தால்  மின்னஞ்சல் பணமோசடி முற்றிலும் தவிர்த்து விடலாம் எனவும் அரசு கூறுகிறது.

author avatar
Parthipan K