அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!!

Photo of author

By Sakthi

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த மாத்திரைகள்! இருவருக்கு சிறை தண்டை அளித்து உத்தரவு!

அரசு மருத்துவமனைகளில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து மருந்து தயாரிக்கும் தனியார் நிறுவன இயக்குநய்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலத்தூர் சிப்காட் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மருந்து தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தரம் குறைந்த மாத்திரைகள் தயாரிக்கப்படுவதாக புகார்கள் வந்தது.

இந்த புகாரின் பேரில் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் தரம் குறைந்த பாரசிட்டமால் மாத்திரைகள் தயாரிக்கபடுவது உறுதியானது.

இதையடுத்து செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக தீர்ப்பளித்தார். அதன்படி தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் இயக்குநர்கள் மகேந்திரா பி ஜெயின் மற்றும் ராஜேஷ் பி ஜெயின் ஆகிய இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.